1700 கிலோ வெள்ளியால் கட்டப்பட்ட சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

1 month ago 4

ஸ்ரீபுரம் பொற்கோயிலில்

1700 கிலோ வெள்ளியால் கட்டப்பட்ட சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

25–ந் தேதி சக்தி அம்மா நடத்தி வைக்கிறார்

வேலூர், ஜன. 23–

வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடம் அமைத்துள்ள பொற்கோயில் வளாகத்தில் 1700 கிலோ வெள்ளியாலான புதிய சக்தி வினாயகர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் மகா கும்பாபிஷேகத்தை வரும் 25ந் தேதி சக்தி அம்மா, நடத்தி வைத்து சிறப்பிக்கிறார்.

புதிய சக்தி வினாயகர் கோயில் குறித்து சத்தி அம்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது.

ஸ்ரீபுரம் என்கின்ற பூமி கடந்த 2000ம் ஆண்டு உருவாகி, முதன் முதலில் அதில் 1500 கிலோ மதிப்பிலான தங்கக் கோயில் உருவாக்கப்பட்டு, அதில் உலகில் முதல் முதலாக ரிக் வேதத்தில் கூறியுள்ள படி 70 கிலோ தங்கத்தில் ஸ்வர்ணலட்சுமி விக்ரகம் உருவாக்கப்பட்டு பிரதட்சை செய்து கும்பாபிஷேம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து உலகம் மக்கள் தொடர்ந்து தரிசித்து வருகின்றனர். இந்த ஸ்வர்ண லட்சுமிக்கு பக்தர்கள் தங்கள் கரங்களால் அஷேகம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பின்னர் இந்த வாளக்திலேயே சீனிவாச பெருமாளுக்கு தனி கோயில் அமைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

மகா கணபதி கோயில்

தங்க கோயில் வளாகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு விநாயகருக்கு புதிய கோயில் அமைக்கப்பட வேண்டும் என அம்மாவின் அருளாள் உருவாகி தொடக்கப்பட்டது. இதற்க்கு 40 அடி நீளம், 25 அடி அகலம் கொண்ட அடித்தளம் ஏற்படுத்தி 40 அடி உயரத்தில் புதிய கணபதி கோயில் கட்டப்பட்டு தற்போது முடிவடைந்து உள்ளது. இந்த கோயிலில் வெண்மையான நிறத்தில், குளுமை பெறக்கூடிய வகையில் 1700 கிலோ வெள்ளியால் உருவாக்கப்பட்டுள்ளது. மூலவர் சிலை மட்டும் ரூ 3. கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை 5.5 அடி உயரம் கொண்டதாகும். ஆக இந்த கோயில் முழுமை அடைந்து திருப்பணிக்கு தாயராக உள்ள நிலையில், ரூ 15. கோடி செலவிடப்பட்டுள்ளது.

வேத முறைப்படி அனைத்து யாக பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்சியாக வரும் 25–ந் தேதி காலை 9.15 மணியிலிருந்து 10.25 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் செய்யப்படும். இது தவிர விநாயகருக்கு பிடித்த விசேஷமான நவதானியங்களில் உருவாக்கப்பட்ட ஒரு லட்சத்து எட்டாயிரம் லட்டுகள் சமர்பிக்கப்பட உள்ளது.

இவ்வாறு சக்தி அம்மா கூறினார்.

பேட்டியின் போது ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ் உடன் இருந்தார்.

Read Entire Article