``10 வருஷ ஃப்ரெண்ட்ஷிப்... இப்போ காதல்!" - `லவ் ஸ்டோரி' சொல்லும் நட்சத்திரா

1 month ago 2

படபட பேச்சு, முகம் முழுவதும் சிரிப்பு என எப்போதும் பாஸிட்டிவ் ஆட்டிட்யூடில் இருப்பவர் தொகுப்பாளினி நட்சத்திரா. ஷார்ட் ஃபிலிம், சீரியல்கள், மாடலிங் என அடுத்தடுத்த தளங்களில் பயணிக்கும் நட்சத்திரா தன் வருங்காலக் கணவரை சமூக வலைதளம் மூலம் மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். தங்கள் வீட்டுப் பெண்ணாக நட்சத்திராவைக் கொண்டாடும் பலரும் சமூக வலைதளம் மூலமாக வாழ்த்துகள் சொல்லி வருகிறார்கள். நாமும் வாழ்த்துகளுடன் நட்சத்திராவிடம் பேசினோம்.

நட்சத்திரா

``ரொம்ப ஹேப்பியா இருக்கேன். எல்லோரும் வாழ்த்துகள் சொல்றாங்க. மக்கள் நிறைய அன்பை எனக்குக் கொடுத்துட்டே இருக்காங்க. நான் ரொம்ப லக்கி. இப்போ ராகவுக்கும் அதே அன்பு கிடைக்கப்போகுது. நன்றி மக்களே" என வாழ்த்திய அனைவருக்கும் நன்றி சொல்லிப் பேச ஆரம்பிக்கிறார்.

``இன்ஸ்டாகிராமில் ராகவுடைய புகைப்படத்தைப் பார்த்திருப்பீங்க. என்னுடைய ஸ்கூல் சீனியர். ஸ்கூல் படிக்கும் போது எனக்கு நாடகங்களில் நடிக்கப் பிடிக்கும். ஒரு முறை ராமாயண நாடகத்தில் நடிக்கப்போன போதுதான் ராகவ் எனக்கு அறிமுகம் ஆனார். எப்போதுமே தன்னுடைய வேலைகளை நேசிச்சு செய்யக்கூடியவர்.

நட்சத்திரா

ராகவ்கிட்ட இருந்து நான் நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டிருக்கேன். ஒரு வேலையைச் செய்தா நம்ம மனசுக்கு திருப்தியா இருக்குறமாதிரி செய்யணும்னு அடிக்கடி சொல்வார். நானும் அதே மாதிரியான எண்ணம் கொண்ட பொண்ணு. அதனால் ரெண்டு பேரும் ஸ்கூல் படிக்கும் போதே ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம்.

கிட்டத்தட்ட 10 வருஷத்துக்கு மேல் நண்பர்களா இருந்திருக்கோம். என்னுடைய எல்லா முயற்சிகளிலும் எனக்குப் பக்கபலமா இருந்திருக்கார். வெளிநாட்டில் படிப்பு முடிச்சு இப்போ பிசினஸ் பண்றார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். `தியேட்டர்காரன்' என்ற பெயரில் நிறைய விழிப்புணர்வு நாடகங்கள், வீதி நாடகங்கள் பண்ணிட்டு இருக்கார். நான் நிறைய பேசிட்டே இருப்பேன். ராகவ் கொஞ்சம் அமைதி. ஆனா, ரொம்ப ஸ்மார்ட். மனுஷங்ககிட்ட ஏற்றத்தாழ்வுகள் பார்க்காம ஒவ்வொருத்தரையும் மரியாதையா நடத்தணுங்கிறதுல ரொம்ப உறுதியா இருப்பார். என்னை நல்லா புரிஞ்சுகிட்ட நண்பன்" என்று ராகவ் புகழ்பாடும் நட்சத்திரா காதல் மலர்ந்த தருணம் பற்றி பேச ஆரம்பித்தார்.

நட்சத்திரா

ஒரு குறிப்பிட்ட வயசுல எல்லாப் பெண்களும் எதிர்கொள்ளும் `எப்போ கல்யாணம்' என்ற கேள்வியை, நானும் எதிர்கொண்டேன். வாழ்க்கைத்துணை பத்தி யோசிக்க ஆரம்பிச்சப்போ, ராகவை விட என்னை நல்லா புரிஞ்சுக்கிட்டவங்க யாரும் இல்லைனு தோணுச்சு. அதே உணர்வும் ராகவுக்கும் இருக்க, ரெண்டு பேரும் காதலைப் பரிமாறிக்கிட்டோம்.

இப்போ ரிலேஷன்ஷிப்பில் இருக்கோம். கிஃப்ட் கொடுத்துகிட்டது கிடையாது. ரெண்டு பேரும் வேலைகளில் பிஸியா இருப்பதால அவுட்டிங் போனது கிடையாது. அதையெல்லாம் தாண்டி நிறைய புரிந்துணர்வும், அன்பும் இருக்கு. எங்கேயாவது வெளிய போகணும்னு நினைச்சா ஒரு ஹோட்டலுக்கு போய் நல்லா சாப்பிட்டுட்டு வருவோம். ரெண்டு பேருமே ஃபுட்டீ, ஒருத்தருடைய புரொஃபஷனை இன்னொருத்தர் மதிக்கிறோம். அதனால் கருத்து வேறுபாடுகள் வந்தது கிடையாது. இன்னும் சொல்லணும்னா நான் என் வேலைகளில் இருக்கும் போது ஊக்கமும், வாழ்த்துகளும் சொல்லி என்னை வழியனுப்பி வைப்பார். இதை விட ஒரு பொண்ணுக்கு என்ன வேணும் சொல்லுங்க.

View this post on Instagram

A post shared by Nakshathra Nagesh (@nakshathra.nagesh)

ரெண்டு பேர் வீட்டிலும் நாங்க எப்போ திருமணத்தை பத்தி பேசுவோம்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. ரெண்டு ஃபேமிலில இருக்கிறவங்களுக்கும் எங்களை ரொம்ப பிடிக்கும். சின்ன வயசிலிருந்து எங்களைப் பார்க்குறதால இப்போ வீட்டுல சொல்லி சம்மதமும் வாங்கியாச்சு. ரெண்டு ஃபேமிலியும் பயங்கர சந்தோஷத்தில் இருக்காங்க. மக்கள் எல்லாருமே என்னை அவங்க வீட்டு பொண்ணாதான் பார்க்கிறாங்க. அதான் சோஷியல் மீடியா மூலமா மக்கள்கிட்டயும் சொல்லிட்டேன்.

நான் சோஷியல் மீடியாவில் ஷேர் பண்ணிருந்த புகைப்படத்தை என்னுடைய ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட் சில வாரங்களுக்கு முன் எடுத்துக் கொடுத்தாங்க. அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து மக்கள்கிட்ட எங்களுடைய உறவைத் தெரியப்படுத்தணும்னு யோசிச்சுட்டு இருந்தேன். இப்போ சொல்லியாச்சு. மக்கள் நிறைய பேர் இப்போ ராகவையும் கொண்டாட ஆரம்பிச்சுருக்காங்க. சொன்னா நம்ப மாட்டீங்க நான் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பண்ணதுக்கு அப்புறம் ராகவுக்கு 1000க்கும் மேல் ஃபாலோ ரெக்வெஸ்ட் வந்திருக்காம்." பட்டாம்பூச்சியாய் படபடக்கும் நட்சத்திராவிடம் திருமணம் எப்போ என்று கேட்டோம்.

நட்சத்திரா

``கூடிய சீக்கிரமே சொல்லிடுவோம். எல்லோருடைய ஆசீர்வாதத்துடன்தான் திருமணம் நடக்கும்" என்று விடைபெறுகிறார் நட்சத்திரா.

Read Entire Article