1 மணி நேரத்தில் டெங்கு கண்டறியும் புதிய கருவி: டெல்லி ஐஐடி உருவாக்கம்

6 days ago 2

டெல்லி, ஏப். 8–

ஒரு மணி நேரத்திற்குள் டெங்கு முடிவுகளை வழங்கும் கருவியை டெல்லி ஐஐடி உருவாக்கியுள்ளது.

டெல்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (IIT) ஆராய்ச்சியாளர்கள் டெங்கு நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான கையடக்க கருவியைக் உருவாக்கியுள்ளனர். இந்த கருவியானது, ஒரு மணி நேரத்தில் டெங்கு சோதனை முடிவை வழங்குகிறது. புனே தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம்(ICMR) மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மலேரியா ரிசர்ச் (NIMR) உடன் இணைந்து ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் நூற்றுக்கணக்கான இரத்த மாதிரிகளை பரிசோதித்து ஒரு மணி நேரத்திற்குள் டெங்கு முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிட்டனர்.

டெங்கு போன்ற பொதுவான நோய்களுக்கு விரைவான நோய் கண்டறிதல் கருவி தேவைப்படுகிறது, ஆனால் இதற்கு விலையுயர்ந்த உபகரணங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தேவைப்படுகின்றன என்று டெல்லியின் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஆராய்ச்சி பணிகளுக்கு தேவையான நிதியுதவி ‘இம்பிரிண்ட் இந்தியா’ திட்டத்தின் மூலம் பெறப்பட்டது என்றும் கூறியுள்ளனர்.

இந்த புதிய கருவி குறித்து பேராசிரியர் பிஎம். சிங் கூறும்போது, இந்த அல்ட்ரா-சென்சிட்டிவ் மற்றும் எளிமையான சாதனம், வைரஸ் நோய்களைக் கண்டறிந்து, ஒரு மணி நேரத்திற்குள் இறுதி முடிவுகளை வழங்கும் திறன் கொண்டுள்ளது என்று கூறி உள்ளார்.

Read Entire Article