ஹீரோவானார் நகைச்சுவை நடிகர் சதீஷ்

1 week ago 3

பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.ஹீரோவானார் நகைச்சுவை நடிகர் சதீஷ்தமிழ்த் திரையுலகில் வடிவேலு, சந்தானம், யோகிபாபு, சூரி உள்பட பல்வேறு பிரபலங்கள் நகைச்சுவை நடிகர்களாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக உயர்ந்துள்ளனர். தற்போது நடிகர் சதீஷும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளார். இவர் தற்போது, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கவுள்ளார். இது அவர் இயக்கும் முதல் படமாகும்.

படக்குழுவினருடன் சதீஷ்

பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை, இன்று நடைபெற்றது. இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் சென்னையிலேயே நடைபெற உள்ளது. இப்படத்தில் சதீஷுக்கு ஜோடியாக ‘குக் வித் கோமாளி’ பிரபலம் பவித்ரா லட்சுமி நடிக்கவுள்ளார். பிரவீன் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு, அஜீஷ் அசோக் இசையமைக்க உள்ளனர்.
இந்தப் படத்தின் பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

The post ஹீரோவானார் நகைச்சுவை நடிகர் சதீஷ் appeared first on Vanakkam London.

Read Entire Article