வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கினார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியா

1 month ago 4

காஞ்சீபுரம், ஜன.23 –

32வது சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி காஞ்சீபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி காந்திரோடு பெரியார் தூண் அருகே நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியா, காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ். மணிமேகலை ஆகி யோர் கலந்து கொண்டு ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை ஒருங்கிணைத்து 100 நபர்களுக்கு விலையில்லா ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சாலை விதிமுறைகள் மற்றும் சாலையில் பயணிக்கும்போது ஏற்படும் கவனக்குறைவுகள் ஆகியவற்றைப் பற்றியும் பின்பு அவற்றினால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றியும் காவல்துறையினரால் எடுத்துரைக்கப்பட்டு பின்பு அவர்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைத்து பொது மக்களுக்கும் உறுதிமொழி ஏற்கப்பட்ட பின்பு ஹெல்மெட் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் சின்ன காஞ்சீபுரம் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன், பெரிய காஞ்சீபுரம் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப் இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர், செல்லப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read Entire Article