`ரூ.20 லட்சம் கோடி நிவாரணம்; 9 புதிய திட்டங்கள் - நிர்மலா சீதாராமன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்

9 months ago 128

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்விதமாக ரூ.20 லட்சம் கோடி நிவாரணம் அறிவித்தார். பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவாக தெரிவிப்பார் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ``5 அம்ச நோக்கங்களுடன் `தன்னிறைவு இந்தியா’ என்ற திட்டம், இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிதாக்கப்படும், சிறு, குறு தொழில்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி கடனுதவி’’ என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

நிர்மலா சீதாராமன்

பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பாக இரண்டாவது நாளாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன், ``இன்றைய அறிவிப்புகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தெருக்களில் வணிகம் செய்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள், சிறு விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்கள் மீது கவனம் செலுத்தப்பட உள்ளன. இன்று மொத்தம் 9 திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 3 திட்டங்களும் தெருக்களில் வணிகம் செய்பவர்களுக்கு ஒரு திட்டம், சிறு வியாபாரிகளுக்கு ஒரு திட்டம், சுயதொழில் செய்பவர்களுக்கு ஒரு திட்டம், சிறு விவசாயிகளுக்கு 2 திட்டங்கள் என அறிவிக்கப்படுகின்றன.

Also Read: `தன்னிறைவு இந்தியா; சிறு, குறு தொழில்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி கடன்’-நிர்மலா சீதாராமன் பிரஸ் மீட் ஹைலைட்ஸ் #LiveUpdates

நாம் லாக்டெளனில் இருந்திருக்கலாம். ஆனால், அரசாங்கம் ஒன்று சும்மா உட்கார்ந்திருக்கவில்லை. இந்த கோவிட் 19 காலகட்டத்தில் விவசாயிகள் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்துக்கு உறுதுணையாக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வங்கிகள் மூலம் இதற்காக இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 86,000 கோடி மதிப்புள்ள சுமார் 63 லட்சம் கடன்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு நபார்டு மூலம் ரூ.29,500 கோடி நிதியுதவி மார்ச் மாதத்தில் அளிக்கப்பட்டது.

மத்திய அரசு அறிவிப்பு

ஊரடங்கு காலத்தில் விவசாயிகளின் கைகளில் பணம் இருக்க வேண்டும் என அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31-ம் தேதி வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 3 கோடி விவசாயிகளுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி குறைந்த வட்டியில் வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வீடற்றவர்களை தங்கவைக்கும் முகாம்களில் தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மூன்று வேளை உணவு மத்திய அரசு சார்பில் வழங்கப்படுகிறது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்க எஸ்.டி.ஆர்.எஃப் மூலம் ரூ.11,000 கோடி அனுப்பப்பட்டது.

Also Read: `லாக்டெளன் 4.0 உண்டு.. ஆனால், அது முற்றிலும் மாறுபட்டது!'- பிரதமர் மோடி அறிவிப்பு

7,200 மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கக்கூடிய ஏழைகளுக்கு உதவுவதற்காக இந்தக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடனுதவி பெற்ற விவசாயிகள் சிரமம் அடையக் கூடாது என்பதற்காகத்தான் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டித்து இருக்கிறோம். கடந்த 2 மாதங்களில் 25 லட்சம் புதிய கிசான் கிரெடிட் கார்டு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் சிறிய விவசாயிகள் சுலபமாக கடன் பெற்றுக்கொள்ளலாம்.

மத்திய அரசு அறிவிப்பு

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் 2.33 கோடி நபர்களுக்கு 1.87 லட்சம் பஞ்சாயத்துகளில் வேலை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் நபர்களின் எண்ணிக்கை நாற்பதில் இருந்து ஐம்பது சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. தற்போது நாட்டில் உள்ள தொழிலாளர்களில் 30 சதவிகிதம் பேர் மட்டுமே குறைந்தபட்ச ஊதியம் பெறுகின்றனர். மற்றவர்களுக்கு அதைவிடக் குறைவாகவே ஊதியம் கிடைக்கிறது. அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது திறமைகளை மேம்படுத்திக்கொள்ள பயிற்சிகள் வழங்கப்படும். 10 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள நிறுவனங்கள் இஎஸ்ஐ வழங்குவதைக் கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நிர்மலா சீதாராமன்

அரிசி அல்லது கோதுமை அடுத்த இரண்டு மாதங்களுக்கு தலா 5 கிலோ புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அடையாளம் காண மாநில அரசுடன் பேசி வருகிறோம். இதன்மூலம் 8 கோடிக்கு மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயனடைவார்கள். இந்தச் செலவை மத்திய அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும். இதற்காக 3,500 கோடி செலவிடப்படும். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.

முத்ரா வங்கியின் கடன் திட்டத்தில் 50,000 ரூபாய்க்கு குறைவாக கடன் பெறுபவர்களுக்கான வட்டி விகிதத்தில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தின்கீழ் சிசு பிரிவில் கடன் வாங்கியவர்களுக்கு 2% வட்டி மானியம் அளிக்கப்படும். நடைபாதை கடை நடத்துபவர்களுக்கு உதவ 5000 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும். இதன்மூலம் 50 லட்சம் தெருவோர வியாபாரிகள் பலன் அடைவார்கள். பழங்குடியினர்களுக்கு 6,000 கோடி காம்பா நிதி (CAMPA fund) வழங்கப்படும். இது பழங்குடிகள் வசிக்கும் பகுதிகளில் கிடைக்கும்.

மத்திய அரசு அறிவிப்பு

சிறுகுறு விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம் கூடுதலாக 30,000 கோடி உடனடியாக வழங்கப்படும். இந்தத் தொகையானது அறுவடைக்குப் பின்பான ஆயத்தப்பணிகளுக்கு அவர்களுக்கு உதவும். மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 3 கோடி கிராமப்புற விவசாயிகள் நேரடியாக பயனடைவார்கள்” எனக் கூறியுள்ளார்.

Read Entire Article