போதைப்பொருள் கடத்தல் தொடர்பு: இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது

1 month ago 4

சென்னை, ஜன. 23–

சட்டவிரோத போதைப்பொருட்கள் கடத்தலில் தொடர்புடைய, இலங்கையை சேர்ந்த இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துாத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள்கள் கடத்துவதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய ரகசிய கண்காணிப்பில், கடந்த நவம்பர் 26 ஆம் தேதி, ‘சேனையா துவா’ மீன்பிடி படகை போலீசார் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.

இந்த படகில் ஹெராயின் உள்ளிட்ட ரூ.1000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் அந்த படகில் இருந்து 5 துப்பாக்கிகள், செல்போன்கள் உள்ளிட்டவையும் இருப்பது கண்டறியப்பட்டது. மத்திய உளவுத்துறையிடம் சிக்கிய 6 பேரும் சட்ட விரோதமாக போதைப்பொருட்கள் கடத்தியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.

2 பேர் கைது

இந்நிலையில் இந்த போதைப்பொருட்கள் கடத்தல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான இலங்கையைச் சேர்ந்த நிவாஸ், முகமது அப்னாஸ் இருவரும், சென்னை காரப்பாக்கத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், இருவரையும் அதிரடியாக கைது செய்தது. ஏற்கனவே பல குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் இவர்களை, தேடப்படும் குற்றவாளிகள் என இலங்கை அரசு அறிவித்து தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article