நான் சொந்தமாக படம் தயாரிக்கிறேன்…. நடிக்க வாங்க – வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்த மீரா மிதுன்

5 days ago 1
Meera Mithun who invited Vadivelu

திரைப்படங்களில் நடிக்க தடை விதித்ததால் ஒதுங்கி இருக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேல் சமீபத்தில் வாட்ஸ் அப் குழு நண்பர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது, “நான் நடிக்காமல் 10 வருடங்களாக வீட்டில் முடங்கி கிடப்பது பெரிய ரணம். எனது உடலில் தெம்பு இருக்கிறது. நடிக்கவும் ஆசை இருக்கிறது. ஆனால் யாரும் வாய்ப்பு தரவில்லை” என்றார். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்ற பாடலை பாடியும் கண்கலங்கினார்.

அதைப் பார்த்து வருந்திய நடிகை மீரா மிதுன் வெளியிட்டுள்ள வீடியோவில், “வடிவேலுவின் சமீபத்திய பேச்சுகள், பேட்டிகளை பார்த்தேன். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்று வருத்தப்பட்டு இருந்தார். எப்போதும் வெற்றிகரமான ஒரு மனிதரை வஞ்சகமாகவும், மோசடி செய்தும்தான் வீழ்த்துவார்கள். ஆனாலும் யாரையும் யாருமே ஒதுக்க முடியாது. இது எனது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம்.

உங்கள் தெனாலிராமன் படம் பார்த்து இருக்கிறேன். அந்த படத்துக்கு நான் பெரிய ரசிகை. நிறைய பேர் நடிப்புக்கான விதிமுறையே தெரியாமல் கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் பெரிய சகாப்தம். கண்கலங்க கூடாது. நான் சொந்தமாக படம் தயாரிக்கிறேன். எனது படத்தில் உங்களுக்கு நடிக்க விருப்பம் இருந்தால் நடியுங்கள். பெருமைப்படுவேன்” என்று கூறியுள்ளார்.

The post நான் சொந்தமாக படம் தயாரிக்கிறேன்…. நடிக்க வாங்க – வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்த மீரா மிதுன் appeared first on Tamilstar.

Read Entire Article