‘நடிகர் ஜெய்’க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘சிம்பு’

1 week ago 3
‘Simbu’ pleasantly surprised actor Jai

விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான பகவதி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார். இவர் கைவசம் பிரேக்கிங் நியூஸ், எண்ணித் துணிக, பார்ட்டி போன்ற படங்கள் உள்ளன.

நடிகர் ஜெய் தற்போது இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் சிவ சிவா படத்திற்கு ஜெய் தான் இசையமைத்துள்ளார்.

நடிகர் ஜெய் நேற்று பிறந்தநாள் கொண்டாடினார். இந்நிலையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடிகர் சிம்பு திடீரென கலந்துகொண்டு சர்ப்ரைஸ் கொடுத்ததாக, நடிகர் ஜெய் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சிம்புவுடன் எடுத்த புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

#FriendsForever #STRJAI pic.twitter.com/NdIrfAoCql

— Jai (@Actor_Jai) April 7, 2021

 

The post ‘நடிகர் ஜெய்’க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘சிம்பு’ appeared first on Tamilstar.

Read Entire Article