தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகம் அதளபாதாளத்துக்கு செல்லும், அராஜகம் உச்சகட்டத்துக்கு போகும்

1 month ago 4

ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் நடந்த பாசறை மன்ற நிர்வாகிகள் கூட்டம்

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகம் அதளபாதாளத்துக்கு செல்லும், அராஜகம் உச்சகட்டத்துக்கு போகும்

பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.எம். பரமசிவம் எச்சரிக்கை

சென்னை ஜன.23-–

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முன்னேறியுள்ள தமிழகம் அதளபாதாளத்துக்கு சென்றுவிடும்; அராஜகம், வன்முறை உச்சகட்டத்துக்கு சென்று விடும் என்று இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.எம். பரமசிவம் கூறினார்.

வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் அரங்கில் ஆர்.கே.நகர், மற்றும் பெரம்பூர் தொகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ். ராஜேஷ், தலைமையில் நடைபெற்றது.

இதில் கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன், மண்டல தேர்தல் பொறுப்பாளர் ஜே.சி.டி.பிரபாகர், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் வி.பி.எம். பரமசிவம் எம்.எல்.ஏ, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்

ஆலோசனை கூட்டத்தில் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் எம்.எல்.ஏ. பேசியதாவது:–

அம்மாவினால் 2008–ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாசறை மற்றும் இன்று கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரது தலைமையில் புதிய பாசறை மன்றங்கள் உருவாக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், தலைமையில் இன்று இந்த அரங்கில் நடைபெறும் பாசறை மன்றத்தின் நிர்வாகிகள் அனைவரும் தொண்டர்கள் இல்லை; நீங்கள் அனைவரும் தலைவர்கள். நாட்டின் தலைவர்களை தீர்மானிக்கும் சக்தியாக உருவாகியுள்ளனர்.

இளைஞர்களைத் தேடி…

இன்று இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் இளைஞர்களை தேடி செல்கின்றனர். ஏன் என தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் படித்த இளைஞர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர். வேலை வாய்ப்பிலும் தமிழகம் முன்னோடியாக உள்ளது. நான் ஒரு மருத்துவராக இருந்தாலும் அண்ணா தி.மு.க. இயக்கத்தில் அடிப்படையில் கடுமையாக உழைத்ததன் பலன் தற்போது சட்டமன்ற உறுப்பினர் இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் என பதவிகள் பெற்றேன். நீங்களும் அவ்வகையில் பாசறை மன்றத்தின் செயல்பாடுகளை உணர்ந்து அரசியலில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு மக்கள் பணிகளில் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

கழகத்தில் மாபெரும் இரு தலைவர்கள் மறைவுக்கு பின் கழகத்தை ஓ.பி.எஸ், இ.பி.எஸ், சிறப்பாக வழி நடத்தி இயக்கத்தை கட்டி காத்து வருகின்றனர். தமிழக மக்கள் மீது அக்கறை கொண்ட நமது முதலமைச்சர் கொரோனா காலத்தில் தீவிர பணியாற்றி மாவட்டங்கள் தோறும் ஆய்வுகள் நடத்தப்பட்டு மருத்துவர்கள் முன்களப்பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், ஆகியோரை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனை முகாம்கள், அமைக்கப்பட்டு நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தார் முதலமைச்சர். மேலும் இந்தியாவில் வேலை வாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் 68 ஆயிரம் கோடி அன்னிய முதலீட்டை பெற்ற மாநிலமாக தமிழகத்தை தலை நிமிர செய்துள்ளார்.

சாதனைகளுக்கு விருது

பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள், ரேஷன் பொருட்கள், கொரோனா ஊரடங்கு காலத்தில் தவித்த பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளின் கால நலன் கருதி அவர்களின் தேர்வு வெற்றிக்கு வழி வகுத்தவர்.

கஜா புயல், நிவர் புயல், உள்ளிட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேருதவி, பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டி திட்டம்,

தை பொங்கலை கொண்டாடும் வகையில் ரூபாய் 2500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு, முதியோர் உதவி தொகை 1000 த்தில் இருந்து 1500 ஆக உயர்த்தும் திட்டம், பெண்கள் வயிற்றில் கரு உயிர் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, பரிசு பெட்டகம், பள்ளி சிறுவர்களுக்கு இலவச சீருடை, காலணி பள்ளி நோட்டு, புத்தக உபகரணங்கள், மாணவ, மாணவிகளுக்கு, விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, கல்லூரி மாணவர்கான அடுத்தக்கட்ட உதவிகள், வேலை வாய்ப்பில் முன்னுரிமை, பட்டைய பெண்களுக்கு திருமண உதவித் தொகை, தாலிக்கு தங்கம், உள்ளிட்ட சிறப்பான திட்டங்களை தொடர்ந்து கழக அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு திறமையாக செயல்படும் தமிழக முதலமைச்சரை இன்று மத்திய அரசாங்கமும் பல முன்னணி பத்திரிக்கைளும் பாராட்டு தெரிவித்து விருதுகள் வழங்கி வருகிறது.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத மு.க.ஸ்டாலின் கிராம சபை நடத்துகிறோம் தமிழகத்தை மீட்டெடுப்போம், என மக்களை திசை திருப்ப தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றார். தமிழக முதலமைச்சரை தரக்குறைவாக பேசுவதும் சமுதாயத்தில் பெண்களை இழிவு படுத்தும் நாகரீகமற்ற செயலில் ஈடுபட்டு வரும் திமுகவினரின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும்.

ஊர் ஊராக போய் ஸ்டாலின் வாய்க்கு வந்தபடி உளறுகிறார். தப்புத்தப்பாக பேசுவார். தவறாக பேசி விட்டோமே என்று கொஞ்சமும் கூச்சப்பட மாட்டார். தலைவருக்கே தகுதியானவர் அல்ல.

பார்லிமெண்ட் தேர்தலில் பொய் வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றார்கள். சொன்னதில் ஏதாவது செய்தார்களா? பார்லிமெண்ட் சென்று தமிழகத்துக்காக குரல் எழுப்பினார்களா?

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகம் அதளபாதாளத்துக்கு சென்று விடும். அராஜகம் உச்சகட்டத்துக்கு போய் விடும். ஆட்சியில் இல்லாத போது என்னென்ன வன்முறை, அராஜகத்தில் தி.மு.க.வினர் ஈடுபட்டார்கள். அண்ணா தி.மு.க. இதுபோன்று அராஜகம் செய்ததாக செய்தி வந்ததா?

புதிய இளைஞர், இளம்பெண்கள், பாசறை மன்ற நிர்வாகிகள் அவரவர் பாக பகுதியில் உள்ள மக்களிடம் வீடு, வீடாக, சென்று கழக அரசின் திட்டங்களயும், சாதனைகளையும் எடுத்து கூறுங்கள்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட ஆர்.கே.நகர், பெரம்பூர், தொகுதியில் கழகத்தால் நிலை நிறுத்தப்படும் இரட்டை இலை சின்னம் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு பரமசிவம் பேசினார்.

கூட்ட இறுதியில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை மன்ற புதிய நிர்வாகிகளுக்கு 1500 பேருக்கு புதிய மன்ற டி.ஷர்ட்-பேன்ட், புடவை, மற்றும் அரிசி மூட்டை, உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதில் ஆர்.கே.நகர் பகுதி கழக செயலாளர்கள் ஆர்.எஸ். ஜெனார்தனம், ஆர். நித்தியானந்தம், எம்.என். சீனிவாசபாலாஜி, மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன், பெரம்பூர் பகுதி கழக செயலாளர்கள் என்.எம்.பாஸ்கரன், வியாசை எம்.இளங்கோவன், பாசறை மாவட்ட செயலாளர் ஜெஸ்டின் என்.பிரேம்குமார், பகுதி பாசறை செயலாளர் என்.குமார், மற்றும் வட்ட செயலாளர்கள், மாவட்ட, பகுதி, வட்ட, பிற அணி நிர்வாகிகள், மகளிரணியினர் உள்பட பலர் இருந்தனர்.

Read Entire Article