திருவள்ளூரில் 26–ந் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் அறிவிப்பு

1 week ago 2

திருவள்ளூர், பிப். 23–

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 26–ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று கலெக்டர் பா.பொன்னையா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் வௌ்ளிக்கிழமை தோறும் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

அதனடிப்படையில் வரும் 26–ந் தேதி காலை 10 மணிக்கு திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

இவ்வாறு கலெக்டர் பொன்னையா கூறியுள்ளார்.

Read Entire Article