திருப்போரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தண்டரை கே. மனோகரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு

1 month ago 3

திருப்போரூர், ஜன. 22–

தேர்தல் பிரச்சாரத்திற்காக திருப்போரூர் வருகைதந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் திருப்போரூர் சட்ட மன்ற உறுப்பினர் தண்டரை கே.மனோகரன் ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன் சிறப்பான வரவேற்பு அளித்தார்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ள சட்ட மன்ற பேரவைத்தேர்தலில் அண்ணா தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணமாக மாவட்ட வாரியாக சென்று பொதுமக்களிடையே வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருப்போரூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட திருப்போரூர் – ஓஎம்ஆர் சாலையில் திருப்போரூர் வள்ளி தெய்வாணை உடனுறை ஸ்ரீகந்தசுவாமி திருக்கோவில் அருகே உள்ள சரவணப்பொய்கை திருக்குளம் எதிரே பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.

இதைத் தொடர்ந்து திருப்போரூர் வருகை தந்த தமிழக முதல்வருக்கு பிரணவமலை என அழைக்கப்படும் கைலாசநாதர் திருக்கோவில் நூற்றாண்டு வளைவு எதிரே அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளரும், முன்னாள் திருப்போரூர் சட்ட மன்ற உறுப்பினருமான தண்டரை கே.மனோகரன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வண்ணமலர்கள் தூவி வாழ்த்து கோஷங்கள், மேளதாங்கள் முழுங்க பூரணகும்ப மரியாதை வழங்கி வரவேற்றார். பின்னர் பூங்கொத்து வழங்கினார்.

Read Entire Article