திடீரென சம்பளத்தை குறைத்த நடிகை சமந்தா…. ஏன் தெரியுமா?

1 week ago 2
Actress Samantha who suddenly slashed her salary

சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் சகுந்தலையாக நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படம் நேரடியாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. குணசேகர் இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர். சகுந்தலை படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் சமந்தாவை ஒப்பந்தம் செய்தனர்.

இந்தப் படத்தில் நடிக்க சமந்தா ரூ.2.50 கோடி சம்பளம் வாங்குகிறார். இதற்கு முன்பு ரூ.3 கோடி வாங்கிய சமந்தா, சகுந்தலை படத்தில் தனது கதாபாத்திரம் பிரதானமாக இருப்பதாலும், தான் நடிக்கும் முதல் புராண படம் என்பதாலும் சம்பளத்தை ரூ.50 லட்சம் குறைத்து இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சமந்தாவுக்கு ஜோடியாக இளம் நடிகர் தேவ் மோகன் நடிக்கிறார்.

The post திடீரென சம்பளத்தை குறைத்த நடிகை சமந்தா…. ஏன் தெரியுமா? appeared first on Tamilstar.

Read Entire Article