சீனாவின் பொருளாதார வளர்ச்சியை ஓவர் டெக் பண்ணிய இந்தியா; வியப்பில் உலக நாடுகள்!

1 week ago 2

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 12.5 சதவீதம் ஆக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள சர்வதேச நிதியம் ஐ.எம்.எப். வருடாந்திர உலக பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 2022ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும். அதேநேரம் கடந்த ஆண்டு கொரோனாவால் அனைத்து நாட்டு பொருளாதாரங்களும் வீழ்ச்சியடைந்த போதும் வளர்ச்சி அடைந்த ஒரே நாடான சீனாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு 8.6 சதவீதம் அளவுக்கே உயரும்.

சர்வதேச அளவில் மைனஸ் 3.3 சதவீதம் வீழ்ச்சி கண்ட சர்வதேச பொருளாதாரம் இந்த ஆண்டு 6 சதவீதம் வளர்ச்சி அடையும் என கூறப்பட்டு உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டிருந்த அறிக்கையில், 2021-2022 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11.5 சதவீதமாக இருக்கும் என கூறியிருந்த நிலையில், தற்போது அதனை உயர்த்தி இருக்கிறது குறிப்பிடத்தக்கது. மேலும் வருடாந்திர உலக பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையில், நடப்பு ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 4.4 சதவீதமாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது

இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் இயல்பாக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டு வசந்த கூட்டத்திற்கு முன்னதாக தெரிவித்துள்ளார்.

Read Entire Article