சாப்பிடும் போது மாஸ்க் போடவில்லை என்ற காரணத்திற்காகக் கர்ப்பிணிப் பெண்ணிடம் விமானப் பணிப்பெண் நடந்து கொண்ட விதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது அங்கு வந்த விமானப் பணிப்பெண், நீங்கள் முகக்கவச விதியை மீறிவிட்டீர்கள். எனவே உங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு விமானத்திலிருந்து இறங்குங்கள் எனக் கடுமையாகக் கூறினார். ஆனால் அந்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பின்னர் தான் தனது குழந்தை சாப்பிட்டுக் கொண்டு இருப்பதை உணர்ந்த அவர், குழந்தை சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறது.
சாப்பிட்டு முடிந்ததும் முகக்கவசத்தை மாட்டி விடுகிறேன் என அந்த பெண் கூறியுள்ளார். ஆனால் நீங்கள் விதியை மீறிவிட்டீர்கள் எனவே உடனே விமானத்தை விட்டு கீழே இறங்குங்கள் எனக் கடுமையாகக் கூறினார். கீழே இறங்க மறுத்தால் போலீசை அழைக்க வேண்டி இருக்கும் என எச்சரித்தார். ஆனாலும் நான் ஒரு கர்ப்பிணி என்னால் இறங்க முடியாது எனப் பிடிவாதமாக அவர் மறுத்து விட்டார்.
இந்த சம்பவம் குறித்து ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.