`சசிகலா நடக்கிறார்; திட உணவு எடுத்துக்கொள்கிறார்!’- பெங்களூரு மருத்துவமனை

1 month ago 4

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலா பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் 4-வது நாளாக சிகிச்சைப் பெற்றுவருகிறார். மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் உள்ள அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.

விக்டோரியா மருத்துவமனை

இதுதொடர்பாக, விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில்,``சசிகலா ஐ.சி.யூ வார்டில் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார். ரத்த அழுத்தம் நார்மலாக உள்ளது. சர்க்கரை அளவும் குறைந்துள்ளது. திட உணவு எடுத்துக்கொள்கிறார்.

உதவியுடன் எழுந்து நடக்கிறார். சிகிச்சைக்கும் தொடர்ந்து ஒத்துழைப்புத் தருகிறார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சசிகலாவின் வயதைக் கருத்தில் கொண்டுதான் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

பரிசோதனை அறிக்கை

நுரையீரலில் இருந்த தொற்றும் குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் விரைவில் அவர் குணமடைவார். 27-ம் தேதி விடுதலையாகும் பட்சத்தில், வேறு மருத்துவமனைக்கோ அல்லது வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கவோ சசிகலா விருப்பம் தெரிவிக்கலாம் என்றும் மருத்துவமனை தரப்பிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

Read Entire Article