சங்கதி சாக்கில் 30 மில்லியன் கான்ராக்டை தனது நண்பருக்கு கொடுத்த மட் ஹனக்- விசாரணை ஆரம்பம் !

3 days ago 2

பிரித்தானிய சுகாதார துறை அமைச்சர், மட் ஹனக் மீது சுகாதார துறையினர்(NHS) விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். மட் ஹனக்கின் அயல் வீட்டுக் காரரும் மிக நெருங்கிய நண்பருமான அலெக்ஸ் என்பவர் ஹின் பக் என்னும் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். கொரோனா தொற்று கால கட்டத்தில் அவரது கம்பெனி பிரித்தானிய சுகாதார துறைக்கு பல பொருட்களை வழங்கியுள்ளது. சுமார் 30 மில்லியன் பவுன்டுகளுக்கு பெறுமதியான பொருட்களை சுகாதார துறை குறித்த கம்பெனியிடம் இருந்து பெற்றுள்ளது.

இதற்கான கான்ராக் எப்படி போடப்பட்டது ? என்பதே தற்போது எழுந்துள்ள பிரச்சனை. வேறு எந்த ஒரு நிறுவனத்திடம் விலையைக் கேட்க்காமல் அப்படியே குறித்த ஒரு நிறுவனத்திடம் எப்படி பொருட்கள் வாங்கப்பட்டது என்றே விசாரணை நடத்தி வருகிறார்கள். கடைசியில் பார்த்தால், அது சுகாதார துறை அமைச்சர் மட் ஹனக்கின் நெருங்கிய நண்பரது நிறுவனமாக அது உள்ளது என்பது மேலும் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது. Source NHS: Matt Hancock defends £30milllion Covid contracts for his pub landlord neighbour being investigated by the UK’s medical regulator and insists it would be ‘ridiculous’ to block friends of ministers from public contracts

Read Entire Article