கிளிநொச்சியில் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை வைத்திருந்தவரை கைது செய்து விட்டார்கள்!

5 days ago 1

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படங்களைத் தொலைபேசியில் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி திருநகர் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் குடும்பப் பிரச்சினை தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். அதன் போது அவரது தொலைபேசியை பொலிசார் சோதனையிட்ட போதே தொலைபேசியில் விடுதலைப்புலிகளின் தலைவர் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் காணப்பட்டுள்ளன.

ஆகவே தடை செய்யப்பட்ட அமைப்பின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிசார் அவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கைதான சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்ற வருவதாகவும் கிளிநொச்சி பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article