``கிடைத்த தோளில் சாய்ந்து, அடுத்த வாழ்க்கைக்குத் தயாராக இல்லை!''- பிரியா பவானி சங்கருக்கு என்னாச்சு?

9 months ago 129

’’தனிமையில், மொட்டைமாடியில் மனம் நிறைய வலிகளுடன் நிற்கிறேன். ஆனால் இந்தத் தனிமை, கிடைத்த கைகளைப் பற்றிக்கொண்டு, கிடைத்த தோளில் சாய்ந்துகொண்டு அடுத்த வாழ்க்கைக்குத் தயாராக என்னைத் தூண்டவில்லை...’’

சில தினங்களுக்கு முன், அதாவது கடந்த வாரம் சித்ரா பௌர்ணமியன்று நள்ளிரவில், தன்னுடைய முகநூல் பக்கத்தில் இப்படியொரு பதிவை போட்டிருந்தார் நடிகை ப்ரியா பவானி சங்கர்.

தொடரும் அந்தப் பதிவு, ''சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால், நினைத்தது மூன்று மாதத்தில் நடக்குமென நண்பன் சொன்னானென்று கடந்த ஆண்டு சென்றேன். கடவுள் கேட்டதைக் கொடுக்கலைன்னாலும் பரவால்ல, கிழித்து என் முகத்துலயே எறிஞ்சு கைதட்டிச் சிரித்தார். போன சித்ரா பௌர்ணமிக்கும் இந்த சித்ரா பௌர்ணமிக்கும் இடையில என் வாழ்க்கையில என்னென்னவோ நடந்திடுச்சு. இன்னைக்கு உலகம் தனிமையில் இருக்கற மாதிரி நானும் தனிமைலதான் இருக்கேன். பரவால்ல. மாற்றங்கள் தருகிற வலிகள் பழகக்கூடும். வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு அழகு...’’ என அந்தப் பதிவில் எழுதியிருந்தார் பிரியா பவானி சங்கர். ஆனால், அடுத்த நாள் காலையில் இந்தப் பதிவை டெலீட் செய்துவிட்டார்.

Priya Bhavani Shankar

இப்பதிவைக் கண்ட பிரியாவின் ரசிகர்கள் பதறிக்கிடக்கிறார்கள். என்ன ஆச்சு பிரியாவுக்கு? நியூஸ் ரீடராகத் தொடங்கி சீரியலுக்குள் வந்து, சினிமா நடிகையாகி முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்ட நிலையில், இப்படியொரு பதிவு ஏன்?

பிரியாவின் நட்பு வட்டத்தில் பேசினோம். ''சினிமா கேரியர்ல எந்தப் பிரச்னையும் இல்ல. இது அவங்களோட பர்சனல் தொடர்புடையதாகவே இருக்கும்னு தோணுது. ஆனா, இப்போதைக்கு நெருக்கமானவங்ககிட்டயே என்ன ஏதுனு முழுசா சொன்ன மாதிரி தெரியலை’' என்றார்கள்.

பர்சனல் என இவர்கள் குறிப்பிடுவது ப்ரியாவின் காதல் பற்றித்தான்.

Priya Bhavani Shankar

ப்ரியாவின் காதல், சென்னை வண்டலூரில் அவர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் தொடங்கியது. உடன் படித்த ராஜ்வேல் என்பவரைக் காதலித்தார். கல்லூரி முடிந்ததும் மேல்படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்ற ராஜ் அங்கேயே பணியிலும் சேர்ந்துவிட்டார். பிரியாவோ, மீடியாவுக்குள் வந்து, அங்கிருந்து சினிமா பக்கம் வந்துவிட்டார். ஆளுக்கொரு திசையில் பயணித்தபோதும் இருவருக்குள்ளும் இருந்த லவ் அப்படியே இருந்தது. அந்தக் காதலுக்கு இருவரின் வீட்டிலுமேகூட ஆதரவுதான். இப்படி போய்க்கொண்டிருந்த சூழலில், இப்போது ஏன் இந்தப் பதிவு?

‘’என்னன்னு எங்களுக்கு முழு விபரம் தெரியலை. கடந்த ஜனவரி மாதம் ராஜ் பிறந்தநாள் அன்னைக்கு, வாழ்த்துச் சொல்லி ஒரு பதிவு போட்டாங்க. ‘எனக்கொரு பெண் குழந்தை பிறந்தா அவ வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆணா இருக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன்’னு சொல்லியிருந்தாங்க. அப்பவே எங்களுக்குக் குழப்பம்’’ என்றார்கள் அந்த நட்பு வட்டத்தினர்.

Priya Bhavani Shankar

‘’மீடியா, சினிமான்னு அவளோட லைஃப்ஸ்டைல் மாறிட்டதால அவங்களுக்கிடையில இருந்த லவ்வும் டேமேஜ் ஆகிடுச்சானு தெரியல. கொஞ்ச நாள் முன்னாடி பிரியாவையும், கூட நடிச்ச ஒரு நடிகரையும் இணைச்சு கிசுகிசுகூட வந்தது. அந்த மாதிரி செய்திகளையெல்லாம் ராஜ் - பிரியா ரெண்டு பேரும் சரியா கடந்து வந்துட்டாங்க. அப்பக்கூட, ‘பத்து வருஷத்துக்கு முன்னாடி என்கிட்ட நீ லவ்வை சொன்னப்ப நான் ஆச்சர்யப்படல, இப்பவும் நீ என்கிட்ட அதே லவ்வோடவே இருக்குறதுதான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு’னு அந்த பிறந்தநாள் மெசேஜ்ல சொல்லியிருந்தாங்க'' என்கிற இன்னொரு தோழியோ, ''பிரேக்-அப்பாங்கிறது அவங்க ரெண்டு பேர்ல யாராவது சொன்னாத்தான் தெரியவரும்'' என்கிறார்.

பிரச்னை எதுவாக இருந்தாலும் பிரியா நிச்சயம் எல்லாவற்றையும் கடந்து வருவார்!

Read Entire Article