காமாட்சி அம்மன் கோயில் உண்டியல்கள் திறப்பு: ரூ.45.39 லட்சம் வசூல்

1 month ago 4

காஞ்சீபுரம், ஜன.24–-

காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள இரு உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை காஞ்சீபுரம் உதவி ஆணையர் மா. ஜெயா தலைமையிலும், ஆய்வாளர் சி.பிரித்திகா, கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் ஆகியோரின் நேரடி மேற்பார்வையிலும் உண்டியல் களை எண்ணும் பணி நடைபெற்றது. 10 மாதங்களுக்குப் பிறகு உண்டியல் களை திறந்து எண்ணப்பட்டதில் ரொக்கம் ரூ.45,39,560 இருந்தது. தங்கம் 284 கிராமும், வெள்ளி 600 கிராமும் இருந்தது. இந்நிகழ்வின்போது காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி, சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் விஸ்வநாதன் ஆகியோரும் உடனிருந்தனர்.

Read Entire Article