கரூர்: `அ.தி.மு.க உறுப்பினர்போல ஆட்சியர் செயல்படுகிறார்!' - செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

1 month ago 4

``இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, அ.தி.மு.கவினர் கொடுத்த பட்டியலை வைத்துக் கொண்டு வாக்காளர்களை நீக்கும் பணியை கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி மேற்கொண்டு வருகிறார். கரூரில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி அதிமுக சேலை கட்டாத ஆட்சியராக செயல்பட்டு வருகிறார்" என்று தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

செந்தில் பாலாஜி

வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை நீக்குதல், சேர்த்தல் உள்ளிட்ட விசயங்களில், கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி தொடர்ந்து அ.தி.மு.க-வினருக்கு சாதகமாக நடந்துவருவதாக செந்தில் பாலாஜி தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்.

Also Read: `பூத்துக்கு ஒன்று; அ.தி.மு.க-வினரிடம் 4 வாக்காளர் அட்டைகள்!’- பகீர் கிளப்பும் கரூர் தி.மு.க

இதுசம்பந்தமாக, நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளார். இந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியரால் சில தினங்களுக்கு முன்பு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

செந்தில் பாலாஜி

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி,``இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த 20 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு, பூத் லெவல் அலுவலர்களின் பணி முடிவடைந்தது. அவர்களை சட்டப்படி தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. ஆனால், தேர்தல் விதிக்கு மாறாக 20 ஆம் தேதிக்கு பிறகு, வீட்டில் இருந்த பூத் லெவல் அலுவலர்களை, அரசு வாகனத்தை அனுப்பி அழைத்து வந்த கரூர் மாவட்ட ஆட்சியர், அவர்களை வைத்துக் கூட்டம் நடத்தியுள்ளார்.

மேலும், அங்கிருந்த அலுவலர்களிடம், `கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதியிலும் அ.தி.மு.க வெற்றி பெற வேண்டும். அதற்காக, எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். நான் செய்து தருகிறேன்' என ஒரு மாவட்ட ஆட்சியரே, அதுவும் தேர்தல் நடத்தும் அலுவலரான மலர்விழி வெளிப்படையாகக் கூறியுள்ளார். இதற்கு மறுப்புத் தெரிவித்து பேசிய சில அலுவலர்களைக் கடுமையாகப் பேசிய கலெக்டர், 'எனது பேச்சை கேட்டு நடக்க விரும்பம் இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் விருப்ப இடமாறுதல் வாங்கிச் செல்லலாம்' எனக் கூறியுள்ளார். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, அ.தி.மு.க-வினர் கொடுத்த பட்டியலை வைத்துக் கொண்டு, வாக்காளர்களை நீக்கும் பணியை கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி மேற்கொண்டு வருகிறார்.

செந்தில் பாலாஜி

கரூரில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, அ.தி.மு.க சேலை கட்டாமலேயே அந்தக் கட்சி உறுப்பினர் போல ஆட்சியர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மேலும், ஒரு தலைபட்சமாக, ஆளும் கட்சிக்குச் சாதகமாக, சட்ட விரோதமாக நடந்துகொள்வதை மாவட்ட ஆட்சியர் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்திற்கு பதில் சொல்லும் நிலைமை ஏற்படும். கரூரில், குறுக்கு வழியில் வெற்றி பெற்றுவிடலாம் என அ.தி.மு.க-வினர் நினைக்கிறார்கள். அவர்களின் பகல் கனவு பலிக்காது. சட்டவிரோதமான செயலை யார் செய்தாலும், தி.மு.க வேடிக்கை பார்க்காது. அவர்கள் சட்டப்படி தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது" என்றார்.

Read Entire Article