எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் மூன்றாவது முறையாக நல்லாட்சியை நிலைநாட்டுவோம்

1 month ago 3

பொன்னேரி ஜன-. 22–

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் மூன்றாவது முறையாக நல்லாட்சியை நிலைநாட்டுவோம் என்று அவைத் தலைவர் மதுசூதனன் பேசினார்.

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதி, ஆரணி பேரூராட்சியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது.

ஆரணி பேரூர் கழகச் செயலாளர் ஏ.எம்.தயாளன் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கழக அவைத்தலைவர் மதுசூதனன், கழக அண்ணா தொழிற்சங்க பொதுச் செயலாளர் கமலக்கண்ணன், திரைப்பட நடிகை பசி சத்யா ஆகியோர் கலந்துகொண்டு எம்ஜிஆரின் சிறப்புகளையும் மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகளையும் பட்டியலிட்டு விவரித்தனர்.

அவைத் தலைவர் மதுசூதனன் பேசுகையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக தமிழகத்தில் அண்ணா தி.மு.க. ஆட்சியை அமைத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் நல்லாட்சியை நிலை நாட்டுவோம் எனச் சூளுரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார், கழக எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் பஞ்செட்டி நடராஜன், திருவள்ளூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பானுபிரசாத், மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ், சோழவரம் ஒன்றிய கழக செயலாளர் கார்மேகம், மீஞ்சூர் ஒன்றியக் கழகச் செயலாளர் மோகன வடிவேல், முன்னாள் சோழவரம் ஒன்றிய கழக செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுதுரை, தலைமை கழக பேச்சாளர் ஆமூர் தனசேகரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் கோளூர் கோதண்டன், மாவட்டத் துணைச் செயலாளர் ஆரணி யுவராஜ், ஆமூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read Entire Article