எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய கடுமையாக உழைப்போம்

1 month ago 2

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட மாணவர் அணி கூட்டத்தில் தீர்மானம்

தாம்பரம், ஜன. 23

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்திட கடுமையாக உழைத்திடுவோம் என்று செங்கல்பட்டு மேற்கு மாவட்ட மாணவர் அணி ஆலோ சனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஜி.எம். சாந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன், பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் என்.சி. கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளை வரவேற்று வாழ்த்திப் பேசினர்.

மாவட்ட செயலளர் சிட்லபாக்கம் ராசேந்திரன் ஆலோசனைகள் வழங்கி பேசியதாவது: மாணவர்கள் தான் நாளைய சமுதாயத்தைத் தீர்மானிக்கும் காரணிகள், மாணவர்களின் துணையின்றி எந்த ஒரு பேரியக்கமும் செயல்பட முடியாது. நமது கழகத்தின் ஆணிவேராக மாணவரணி செயல்படுகிறது. அவர்கள் தான் நமது கழகத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளையும், கழக அரசின் மக்கள் நல திட்டங்களையும் இளை சமுதாயத்திடம் எடுத்துச் செல்கின்றனர். மாணவ சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட நமது முதல்வர் மாணவர்களின் உயர்கல்வி, மருத்துவக்கல்வி பெற எண்ணில் அடங்கா சிறப்பு கல்வி திட்டங்களை வழங்கியுள்ளார். மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில் நீட் தேர்வில் தேர்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி அவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றியுள்ளார். எனவே மாணவர்களின் பேராதரவு நமக்கு கிடைத்துள்ளது என்றார்.

கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நமது கழக அரசின் சாதனைகளை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமூக வலைதளங்கள் மூலமாகவும், துண்டு பிரச்சாரம் மூலமாகவும் இளைஞர்களிடமும், பொதுமக்களிடமும் எடுத்துச்கூறி கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்து, நமது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் மலரச் செய்ய வேண்டும் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் சிட்லபாக்கம் பேரூராட்சி கழக செயலாளர் இரா. மோகன், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர்கள் குரோம்பேட்டை டாக்டர் டி. மோசஸ் ஜோஷ்வா, ஞா. சந்திரசேகர்ராஜா, டி.டி. தில்லைராஜ், சி. அருண்குமார், துணைச் செயலாளர்கள் எம்.கே. சுரேஷ், ஆர். பாபு, தலைவர் டி. பாலமுருகன், துணைத் தலைவர்கள் ப. பாலன், ஆர். மணிகண்டன் தீபக், எ.பி. தினேஷ் குமார், பொருளாளர் டி. தினேஷ், பரங்கிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.பி. மனோகரன், காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் டி. இராஜேஷ், காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வி. ரோஷன் குமார், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எம். பொன் தர்மராஜ், தாம்பரம் நகர செயலாளர் கோ. எம். கார்த்திகேயன், பல்லாவரம் நகர செயலளார் எஸ். வெங்கட், செங்கல்பட்டு நகர செயலாளர் கே. தியாகராஜன், மறைமலை நகர் நகர செயலாளர் ஜி. தினேஷ் குமார், பம்மல் நகர செயலாளர் என்.சி.கே. நரேஷ், அனகாபுத்தூர் நகர செயலாளர் பி. பரத், செம்பாக்கம் நகர செயலாளர் அப்பு வி. நாகராஜன், சிட்லபாக்கம் பேரூராட்சி செயலாளர் பி. மயூரன், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி செயலாளர் ஜி. செல்வமணி, பெருங்களத்தூர் பேரூராட்சி செயலாளர் டி. அவினாஷ், திருநீர்மலை பேரூராட்சி செயலாளர் ஜே. சாந்தப்பராஜ், மாடம்பாக்கம் பேரூராட்சி செயலாளர் எஸ். சதீஷ்குமார், பீர்க்கன்காரணை செயலாளர் பி. ஜெகதீஷ் உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Read Entire Article