உலக சிக்கன நாள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்

5 days ago 2

வேலூர், பிப். 23–

உலக சிக்கன நாளை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் அ.சண்முகசுந்தரம் பாராட்டு சான்றிதழ் மற்றும் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அ.சண்முகசுந்தரம் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் பணியின் போது இறந்த ராணுவ வீரர் பரசுராமன் என்பவரின் மனைவி சரஸ்வதி என்பவருக்கு கருணை அடிப்படையில் பதிவறை எழுத்தருக்கான பணி நியமன ஆணையை கலெக்டர் அ.சண்முகசுந்தரம் வழங்கினார்.

இக்கூட்டத்தில் நிலப்பட்டா புதிய குடும்ப அட்டை, பட்டாமாறுதல், வேலைவாய்ப்பு, கடனுதவி, நிதியுதவி, இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை, காவல்துறை பாதுகாப்பு, மின் இணைப்பு மற்றும் பொதுநல மனுக்கள் என மொத்தம் 241 மனுக்களை வழங்கினார்கள். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முன்னதாக மாற்றுதிறனாளி மனுதார்கள் வழங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க மாற்று திறனாளிஅலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து உலக சிக்கன நாள் 2020-ஐ முன்னிட்டு கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, சிறுசேமிப்பு குறித்த விழிப்புணர்வு சொற்றொடர் போட்டி, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் பாராட்டு சான்றிதழ் மற்றும் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் காமராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வேணுசேகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) விஜயராகவன், (நிலம்) தனஞ்செயன், (சிறு சேமிப்பு) அன்புநிதி மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Read Entire Article