`உலகப்போர் மரணங்களை விட, அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் அதிகம்!’ - ஜோ பைடன் உருக்கம்

1 day ago 2

கொரோனா வைரஸ் பரவலால் உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்புக்குள்ளாகின. உலகளவில் இன்றுவரை 11.23 கோடி பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24.86 லட்சம் நபர்கள் உயிரிழந்துள்ளனர். பெருமளவு பாதிப்புக்கு உள்ளன நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இன்றுவரை 2.88 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 5.12 லட்சமாக உயர்ந்துள்ளது. 1.91 கோடி மக்கள் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

Today, our nation passed another grim milestone in this pandemic: 500,000 lives lost. Join us as we honor their memory. https://t.co/AzUzXoVUgb

— President Biden (@POTUS) February 22, 2021

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் இன்றுவரை 1.10 கோடி பேர் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1.56 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 1.07 கோடி பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளனர். அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் கொரோனா பாதிப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

Also Read: கொரோனா அதிகரிப்பு: மகாராஷ்டிராவில் பொதுக்கூட்டங்கள், அரசியல் நிகழ்ச்சிகளுக்குத் தடை!

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்த மக்களுக்கு, வெள்ளை மாளிகை வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், சில நிமிடங்கள் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனையடுத்து அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

`` பெருந்தொற்றின் இந்தக் கடுமையான நேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அவர்களின் நினைவுகளுக்கு மரியாதை செலுத்துவோம்” என்று அதிபர் ஜோ பைடன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

``உலகளவில் கொரோனாவால் அமெரிக்காவில்தான் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கர்கள் அனைவரும், நாம் இழந்த அந்த உயிர்களை நினைவுகூர வேண்டும். முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், வியட்நாம் போர் ஆகிய மூன்று போர்களில் அமெரிக்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட, கடந்த ஒரு வருடத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்" என்று வருத்தத்துடன் அதிபர் ஜோ பைடன் மக்களிடம் உரையாற்றினார்.

Read Entire Article