உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் எம்.சி. சம்பத் வழங்கினார்

5 days ago 2

கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில்

உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை:

அமைச்சர் எம்.சி. சம்பத் வழங்கினார்

கடலூர், பிப். 23–

கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நேரடி நியமன உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணையினை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

கடலூர் மாவட்டத்தில் 88,893 விவசாயிகளுக்கு அசல், வட்டி, அபராத வட்டி,இதர செலவினங்கள் உட்பட மொத்தம் ரூ.655.58 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிழ்களையும் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 44 உதவியாளர்களுக்கு நேரடி பணி நியமணத்திற்கான ஆணையினையும் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:

முதலமைச்சரால் தமிழக சட்டப்பேரவை விதி 110 அறிவிப்பில் கூட்டுறவு நிறுவனங்களின் நிலுவையில் உள்ள விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் மூலம் 88893 விவசாயிகள் பெற்ற கடனுக்கான அசல் ரூ.587.71 கோடி, வட்டி ரூ.61.76 கோடி, அபரா வட்டி ரூ.5.50 கோடி, இதர செலவினங்கள் ரூ.0.61 – கோடி, உட்பட ஆகமொத்தம் ரூ.655.58 கோடி மதிப்பீ்ட்டில் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் விளங்குகிறது. வடகிழக்கு பருவ மழை காலங்களில் பல்வேறு விவசாய பயிரினங்கள் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் பல்வேறு சேதங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டது.

தமிழக அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அவர்கள் வாழ்வில் ஏற்றம் பெற வழிவகுத்து வருகிறது. விவசாயிகள் கூட்டுறவு துறையின் மூலம் பெற்ற பயிர் கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவினால் விவசாயிகளின் கடன் சுமையை குறைத்து வாழ்வாதாரம் உயர்த்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில கடலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வே.நந்தகுமார், கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் இளஞ்செல்வி, மத்திய கூட்டுறவு வங்கியின் துணை பதிவாளர் இராஜேந்திரன், மத்திய கூட்டுறவு வங்கியின் பொதுமேலாளர் (பொ) டி.பலராமன், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் சரக துணை பதிவாளர்கள், கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள், கூட்டுறவு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Read Entire Article