இலங்கை தமிழ் பிரபலங்களுக்கு என்ன நடந்தது?; மர்மம் என்ன?

1 month ago 2

இலங்கை தமிழ் ஊடகங்களில் கடந்த ஓரிரு தினங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

குறிப்பாக பிரபல அறிவிப்பாளர்கள் தமது பதவிகளிலிருந்து விலகி வருவதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையின் பிரபல வானொலியான சூரியன் எப்.எம்மில் கடமையாற்றிய சந்துரு மற்றும் மேனகா ஆகியோர், திடிரென தமது பதவி விலகலை அறிவித்திருந்தனர்.

இந்த இருவரும் தமது பேஸ்புக் ஊடாக ரசிகர்களுக்கு தமது விலகல் தொடர்பிலான அறிவிப்பை விடுத்திருந்தமை, ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தனிப்பட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டே, தாம் பதவி விலகியதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அன்பான நேயர்கள் உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் கோடி ❤

தனிப்பட்ட காரணங்களுக்காக நாங்கள் சூரியனில் இருந்து விலகுகிறோம்….

இதேவேளை, ஸ்டார் தமிழ் வானொலியின் பிரபல அறிவிப்பாளரான சக்சிவர்ணன் (Rj சக்சி) தனது பதவி விலகலை அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

மேலும், தனியார் தொலைக்காட்சியொன்றில் கடமையாற்றி வந்த பிஸ்ரின் மொஹமட்டும் பதவி விலகலை அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

Read Entire Article