இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் கொரோனா பாதிப்புக்கு சிசிச்சை

6 days ago 2

சென்னை, ஏப். 8–

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. அந்த வகையில் நடிகை நிவேதா தாமஸ், நடிகை ராதிகா, நக்மா, கத்ரினா கைஃப், ஆலியா பட், நடிகர் அக்ஷய் குமார் உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தமிழ் திரையுலகின் பழம்பெரும் இயக்குநரான எஸ்.பி.முத்துராமனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. நேற்று முன்தினம் உடல் சோர்வால் மருத்துவமனைக்கு சென்ற முத்துராமனுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானதால் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எஸ்.பி முத்துராமன் அனுமதிக்கப்பட்டிருக்கும் மெட்வே மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் தொடர்ந்து மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Entire Article