இந்தியாவுக்கு நாடு கடத்தப்படாமல் தப்பிக்க இங்கிலாந்தில் தஞ்சம் கேட்கிறாரா, விஜய் மல்லையா?

1 month ago 3

ரூ.9 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடி வழக்கில் சிக்கிய விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது. அதற்கு எதிரான அவரது மேல்முறையீட்டு மனுவை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இங்கிலாந்து உள்துறை மந்திரி கையெழுத்திடாததால், விஜய் மல்லையா இன்னும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படவில்லை.

இதற்கிடையே, கடந்த ஆண்டு விற்கப்பட்ட விஜய் மல்லையா சொத்துகளில் இருந்து அவரது வழக்கு செலவுகளுக்கு பணம் விடுவிக்க உத்தரவிடக்கோரி அவர் சார்பில் லண்டன் திவால் வழக்குகளுக்கான கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விஜய் மல்லையாவை நாடு கடத்தும் நிலவரம் குறித்து நீதிபதி கேட்டார்.

அதற்கு மல்லையாவின் வக்கீல் பிலிப் மார்ஷல், இங்கிலாந்து வெளியுறவு மந்திரிக்கு விண்ணப்பிக்கும் மற்றொரு வழிமுறை, மல்லையாவுக்கு இருப்பதாக தெரிவித்தார். இதன்மூலம், இங்கிலாந்தில் தஞ்சம் கேட்டு விஜய் மல்லையா விண்ணப்பித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Read Entire Article