இடையாம்பட்டி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு கூட்டம்

1 month ago 2

கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது

வேலூர், ஜன. 23–

வேலூர் வட்டம், மேட்டு இடையாம்பட்டி கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வாக்காளர் விழிப்புணர்வு, கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் அ.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியாதாவது:-

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிராம பகுதிகளில் சுகாதார பணிகள், தூய்மை பணிகள் தனிநபர் கழிப்பறை, கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் ஏரி, குளம், குட்டைகளில் கழிவு நீர் சென்று கலப்பதை தடுக்க வேண்டும். அர்பணிப்பு உணர்வுடன் ஏரி குளம் குட்டைகளை பாதுகாக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறையை போக்க அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக பதிவு செய்து கொள்ள வேண்டும். நீர் மேலாண்மை பணிகளில் பொது மக்கள் ஈடுபட வேண்டும். கொரோனா தடுப்பூசிகளை அனைவரும் அச்சமின்றி போட்டுக் கொள்ள வேண்டும். பொது கழிப்பிடங்களை தூய்மையாக பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும். பொது மக்களின் வரிப்பணத்தில் கட்டப்படும் அரசு கட்டடிடங்களையும், ஏரி, குளம், குட்டைகளை பாதுகாக்க வேண்டியது பொது மக்கள்அனைவரது கடமையாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஆரோக்கியமான குழந்தைகளின் தாய்மார்களுக்கு பரிசுகளை வழங்கிய கலெக்டர் சண்முகசுந்தரம் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

இந்நிகழ்ச்சியில் பத்திரிக்கை தகவல் அலுவலக தலைமை இயக்குநர் எஸ்.வெங்கடேஸ்வரர், மண்டல மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் மா.அண்ணாதுரை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட் ரமேஷ், அமுதவள்ளி, வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மு.சாந்தி பிரியதர்ஷினி, வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் கள விளம்பர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Read Entire Article