சென்னை, பிப்.23–
துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் முக்கிய துறைகள் மற்றும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி வருமாறு:-
* சுகாதாரத் துறைக்கு ரூ.19,420 கோடி ஒதுக்கீடு
* கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.13,350 கோடி செலவு
* வேளாண்மைத்துறைக்கு 1,738 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* நீர்வள ஆதாரத் துறைக்கு 6,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* மீன்வளத் துறைக்கு 580 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* காவல் துறைக்கு 9,567 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* கோவை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு
* நீதித்துறை நிர்வாகத்துக்கு 1,437 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* உள்ளாட்சி துறைக்கு 22,218 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* நெடுஞ்சாலை துறைக்கு ரூ.18,750 கோடி ஒதுக்கீடு
* பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3,700 கோடி ஒதுக்கீடு
* 1580 கோடி ரூபாய் செலவில் மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
* அம்மா மினி கிளினிக்குகளுக்கு ரூ.144 கோடி