`ஆண்களின் அந்த இரண்டு அன்புக்கும் வித்தியாசம் உண்டு!' - இயக்குநர் தங்கர் பச்சான்

5 days ago 2

`பெண் மனது ஆழமானது’ என்று ஆணுக்கு சொல்லியிருக்கிற இந்த சமூகம், ஆண் மனது எப்படிப்பட்டது என்று பெண்ணுக்குச் சொன்னதாகவே தெரியவில்லை. தான் நேசிக்கிற ஒரு காரணத்துக்காகவே, `அவர் ரொம்ப நல்லவர்’ என்று சர்ட்டிஃபிகேட் கொடுப்பதற்கும், பொள்ளாச்சி சம்பவம் போல ஆபத்தில் மாட்டிக் கொள்வதற்கும், ஆண்களைப்பற்றிய சரியான புரிந்துணர்வு பெண்களுக்கு இல்லாததுதான் காரணம். அந்த வகையில் ஆண்களைப் பற்றி பெண்களுக்கு முழுமையாகப் புரிய வைத்துவிட வேண்டும் என்பதற்காக அவள் விகடனில் `ஆண்களைப் புரிந்துகொள்வோம்' என்கிற தொடரை எழுத ஆரம்பித்திருக்கிறோம்.

இந்தத் தொடர் ஆண்களின் தவறுகளை மட்டுமல்ல; அவர்கள் உலகத்து அவஸ்தைகளையும் பேசும். சென்ற இதழ்களில், பிளேபாய் மற்றும் சாக்லெட் பாய் இயல்புகளையும், பெண்களின் மார்பகத்தை உற்றுப்பார்க்கிற ஆண்களைப்பற்றியும், குடும்ப வன்முறைகள், உருவகேலி, உருகி உருகிக் காதலித்தவன் திருமணத்துக்குப் பிறகு பாராமுகம் காட்டுவது ஏன் ஆகியவை குறித்தும் பேசியிருந்தோம். இந்த இதழில் `அம்மாவுக்கு அன்பான மகன்... மனைவிக்கு அன்பான கணவனா?' பற்றிப் பேசியிருக்கிறோம். இதழில் வெளியாகும் தொடரின் நீட்சியாக விகடன் இணையதளத்திலும் இந்த ஆண்களைப் புரிந்துகொள்ளும் சூத்திரத்தை பலதுறை பிரபலங்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகள் வாயிலாக தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம்.

அந்த வகையில் இந்த வாரம் இயக்குநர் தங்கர் பச்சான்.

Also Read: ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 7 - அம்மாவுக்கு அன்பான மகன்... மனைவிக்கு அன்பான கணவனா?

தங்கர் பச்சான்

ம் ஊரில் திருமண வயதில் இருக்கிற பெண்களுக்கு வயதில் மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை ஒன்று இருக்கிறது. `அம்மா மேல பாசமா இருக்கிற ஆம்பளைப் பசங்க கட்டிக்கிற பொண்டாட்டி மேலேயும் பாசமா இருப்பானுங்க.' அதாவது, `உனக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளை அவன் அம்மா மேல பாசமா இருக்கான். அதனால உன்னையும் அவன் நல்லா பார்த்துப்பான். அவனைக் கல்யாணம் செஞ்சுக்க சம்மதம் சொல்லு' என்பதுதான் அதற்கு அர்த்தம்.

இந்தச் சொலவடையில் உளவியல்ரீதியாகவும் எதார்த்தமாகவும் உண்மை இருக்கிறதா என்பதுபற்றி, உளவியல் நிபுணர் பேசுகையில், ``அம்மா மீது பாசமில்லாத மகன்களை இங்கே பார்க்கவே முடியாது. அந்த வகையில், அம்மா மீது பாசமாக இருக்கிற அத்தனை மகன்களும் தங்கள் மனைவி மீதும் அன்பாக இருக்க வேண்டும். அப்படி அன்பாக இருந்தால், இங்கே கிட்டத்தட்ட எல்லா மனைவிகளுமே திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக அல்லவா இருக்க வேண்டும். அப்படி இருக்கிறார்களா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்தச் சொலவடை குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் அவர்களிடம் கேட்டோம்.

love

``அம்மா மீது இருப்பதைப் போன்ற அதே அன்பை மனைவி மீதும் காட்டுவேன் என்கிற சொல் வழக்கில் எனக்கு உடன்பாடில்லை. ஒவ்வோர் உறவுக்கும் ஒவ்வொரு தனித்துவம் உண்டு. அதனால், அம்மா, மனைவி, அண்ணி, தம்பி மனைவி, மகள் என்று எல்லா பெண் உறவுகளுக்கும் என்னிடம் சமமான மரியாதையும் அன்பும் உண்டு. தவிர, ஒருவரைவிட இன்னொருவரின் மீது அதிக பாசம் என்பதும், இவர் மீது இருப்பதைப் போன்ற பாசத்தை அவர் மீதும் செலுத்துவேன் என்பதும் எப்படிச் சரியாக இருக்க முடியும்?

13 வயதில் சென்னைக்கு வந்தேன். அதன் பிறகு, ஆண்டுக்குச் சில நாள்கள் மட்டுமே அம்மாவைச் சந்திக்க ஊருக்குச் சென்றிருக்கிறேன். சொந்த அக்காவின் மகளைத்தான் திருமணம் செய்துகொண்டேன். அம்மாவுக்குப் பிறகு, என் மனைவிதான் என்னை வழி நடத்தி வருகிறார். அம்மாவை இழந்த குறை தெரியவில்லை. அந்த இடத்தை மனைவிக்குரிய அன்பால் நிரப்பிக்கொண்டிருக்கிறார். வீட்டு விஷயங்களை மட்டுமல்ல, என் படங்கள் தொடர்பான விஷயங்களையும் முன்கூட்டி யோசித்து, `இத இப்படி செய்யுங்க மாமா’ என்று அவர் என்னை வழி நடத்துவது எனக்கு வியப்பாக இருக்கும். நுட்பமான இந்த உணர்வுகள் பெண்ணுக்கு இயற்கையிலே இருக்கின்றன. ஆண் அதற்குத் தடை போடாமல் இருந்தாலே போதும்.

இயக்குநர் தங்கர் பச்சான்

Also Read: ஆண்களைப் புரிந்துகொள்வோம்! : 4 - கணவரின் நண்பர்களை மனைவிக்குப் பிடிப்பதில்லையே... ஏன்?

ஒரு குடும்பத்துக்குள் ஆணின் உழைப்பைவிட பெண்ணின் உழைப்பு பல மடங்கு அதிகம். ஆண் பத்து பிறவிகளில் உழைப்பதை பெண் ஒரே பிறவியில் உழைத்துவிடுகிறாள். நம்முடைய கலாசாரத்தில் பெரும்பான்மை உழைப்பையும் கடமையையும் பெண் மீதே சுமத்தி வைத்திருக்கிறோம். அவளை தெய்வம் என்று சொல்லிச் சொல்லியே வேலை வாங்குகிறோம் அல்லது என் அம்மா இப்படித்தான் வேலைபார்த்தார். இது ஒன்றும் புதிய விஷயமில்லை என்று சொல்லாமல் சொல்லி வேலை வாங்குகிறோம்.

நான் பெண் விடுதலை பேசவில்லை. ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் பெண்ணின் உழைப்பில்தான் அதிகபட்சம் அடங்கியிருக்கிறது என்பதைத் தெரியப்படுத்தவே இதைச் சொல்கிறேன். என் விஷயத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். நான் கதை எழுதுவேன், படம் எடுப்பேன், வேறு தெரியாது. என் மனைவிக்கு எல்லாம் தெரியும். என்னுடைய படங்களில் அவருடைய கருத்துப் பங்களிப்பும் இருக்கிறது. அவருடைய கருத்தை என்னுடைய படங்களைப் பார்க்கிற பெண்களின் எண்ணமாகத்தான் எடுத்துக்கொள்வேன்.

love

Also Read: ஆண்களைப் புரிந்துகொள்வோம்! : 5 - வளராத மீசை... வளரும் தாழ்வு மனப்பான்மை...

அம்மா இல்லாமல் பிறவி கிடையாது. மனைவி என்பவள் கணவனின் மனம், உடல், வாழ்க்கை என எல்லாவற்றிலும் இரண்டற கலந்தவள். அதனால் மனைவி என்கிற பாதியில்லாமல் இங்கு ஆண்கள் வாழவே முடியாது. அம்மா மீதான அன்பும் மரியாதையும் தனி. மனைவி மீதான காதலும் மரியாதையும் தனி. அவர்களை நான் அவர்களாகவே நேசிக்கிறேன்.’’

இந்தச் சொலவடை தொடர்பான நிபுணரின் கருத்தை முழுமையாக வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Read Entire Article